பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜூன், 2015

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் கனிமொழி மீது ஈழப் பெண்மணி அனந்தி சசிதரன் தெரிவித்த குற்றச்சாட்டு

நேற்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் கனிமொழி மீது ஈழப் பெண்மணி அனந்தி சசிதரன் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லும் விதமாய் கொண்டு வரப்பட்ட
நான்கு பேரில் மூன்று பேர் திமுகவுக்கு ஆதரவானவர்கள். ஒருவர் நடுநிலையாளர். ஈழத்தில் இருந்து நேரடியாக தொலைபேசியில் தொடர்புக் கொண்டு தனது கருத்துக்களை எடுத்து வைத்த அனந்தி சசிதரன் தனி ஒருவளாக மாட்டிக்கொண்டாலும் கொஞ்சமும் நிலைதடுமாறாமல் தனது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்து வைத்தார். திமுகவினர் திணறித்தான் போனார்கள்.திமுக தரப்பில் கலந்துக் கொண்ட ஜெகத் கஸ்பர் நானும் கனிமொழியும் சுபவீர பாண்டியனும் போர் நடந்த காலைத்தில் விடுதலைப் புலிகளுடன் இரவெல்லாம் பேசிக்கொண்டு கிடந்தது உண்மைத்தான் என்று சொல்லவும் மற்ற இரு திமுகவினரும் மிரளலானார்கள். 2010 தொடக்கத்திலேயே நக்கீரன் பத்திரிகையில் ஈழப்போர் பற்றி எழுதும்போது இதைப் பற்றியெல்லாம் ஜெகத்கஸ்பர் எழுதி இருந்தார். இது ஒன்றும் திமுகவினர் சொல்வது போல, புதுசாக இப்போதுதான் கனிமொழி மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள் என்பது உண்மை அல்ல என்பது இந்த விவாதத்தின் போது நிரூபிக்கப்பட்டது. கனிமொழி எந்த அளவுக்கு பொய் சொல்லக் கூடியவர் என்பது மக்களுக்கு தெள்ளத் தெளிவாகத் தெரிந்துப் போனது.
இந்த நிகழ்ச்சிக்கு முந்தின நாள் நியூஸ் 7 தொலைக்காட்சியிலும் இதே விவாதம் வந்தது. அந்த நிகழ்ச்சியும் திமுக ஆதரவாளர்களே கலந்துக் கொண்டனர். அவர்களின் முக்கியமானவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அரசு. விடுதலை புலிகளின் பால் பேரன்பு கொண்டவரான வன்னி அரசு தனது எஜமானர்களான திமுகவுக்கு சார்பாக பேசவும் முடியாமல், ஈழப் பெண் அனந்தியின் வாதத்தையும் மறுக்க முடியாமல் தவித்தார். பெரும்பாலும் பேசுவதைத் தவிர்த்துவிட்டு உட்கார்ந் இடத்தில தவித்துக் கொண்டு இருந்தார். . கணவனுக்காகவும் பேச முடியாமல், பிள்ளைக்கு ஆதரவாகவும் பேச முடியாமல் தவிக்கும் ஒரு தாயின் மனநிலையில் அவர் இருந்தார். தர்மசங்கடமான விவாதம் அது அவருக்கு. போர்க்களத்தில் நடுநிலையாளன் நிலை எப்படியோ அப்படி ஒரு நிலை அவருக்கு. நீங்கள் எழுந்துப் போய் விடுங்கள் என்று சொல்லலாம் போல இருந்தது. திருமா அந்த இடத்தில இருந்திருந்தால் கூட திமுகவுக்கு ஆதரவாய் பேசிவிட்டு மீசையை நீவிக் கொண்டே எழுந்து போய்க் கொண்டே இருந்திருப்பார் . அத்தகைய கல்மனம் வன்னி அரசுக்கு வாய்க்கவில்லை, பாவம்.