பக்கங்கள்

பக்கங்கள்

16 ஜூன், 2015

கிழக்கு மாகாண சபையில் அமளிதுமளி! எதிர்கட்சி தலைவராக விமலவீர திசாநாயக்க தெரிவு


கிழக்கு மாகாண சபை இன்று காலை கூடியபோது மாகாணசபை எதிர்க்கட்சி தலைவராக விமலவீர திசாநாயகவை நியமிக்குமாறு, சபையின் எதிர்க்கட்சி  உறுப்பினர்கள் முன்மொழிந்த போது, அதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தமையால் சபையில் அமளிதுமளி ஏற்பட்டது.
இதனால் மாகாணசபை அமர்வுகள் 10.30வரை ஒத்திவைக்கபப்பட்டு மீண்டும் அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதன்போது முன்னாள் கல்வியமைச்சர் விமலவீர திசாநாயக்க எதிர்கட்சிதலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை சபைத்தவிசாளர் சந்ரதாச கலபதி சபையில் அறிவித்தார்.
தொடர்ந்து மன்னார் மறிச்சுக்கட்டி பகுதியில் உள்ள மக்கள் இனமத வேறுபாடுகள் இன்றி குடியேற்றப்பட வேண்டும். அதற்கு கிழக்கு மாகாணசபை ஒத்துளைப்பு வழங்க வேண்டும் என்ற பிரேரணையை அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாணசபை உருப்பினர்.A.A.M ஜமீல் கொண்டுவந்தார்.
அதற்கு சபையில் இருந்த அனைவரும் ஆதரவு  தெரிவித்த போதிலும் உறுப்பினர் துரைரத்தினம் கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற மீள்குடியேற்றம் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்க, வெளி மாவட்டங்களில் நிலவுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வது பொருத்தமற்ற செயல் எனக் சுட்டிக்காட்டினார்.