பக்கங்கள்

பக்கங்கள்

13 ஜூன், 2015

இரண்டாம் நாளாக இன்றும் செயற்பாட்டு திறனுடைய கைகள் வழங்கிவைப்பு


யாழ்ப்பாணம் றோட்டறி கழகமும் அவுஸ்திரேலிய றோட்டறி கழகமும் இணைந்து போரினால் காயமடைந்து அவயவங்களை இழந்தவர்களுக்காகன நலவாழ்வுத்
திட்டத்தின் கீழ் இரண்டாம் நாளாக இன்றும் கைகளை இழந்தவர்களுக்கு செயற்பாட்டு திறனுடைய செயற்கை கைகள் பொருத்தும் செயற்திட்டம் யாழ் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நடைபெறுகிறது.
நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட குறித்த செயற்திட்டத்தில் இன்று 50 பயனாளிகளுக்கு செயற்பாட்டு திறனுடைய செயற்கை கைகள் பொருத்தப்படவுள்ளன.
அவுஸ்திரேலிய றோட்டறி கழகத்தை சேர்ந்த வைத்திய நிபுணர்களால் கைகள் பொருத்தப்படுகின்றன.
மேலும் இன்றைய தினம் கண் பார்வை குறைபாடுடைய 100 பேரிற்கு கண்ணாடிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் கண் பார்வை குறைபாடுடையோர் மற்றும் செயற்திறன் கைகள் தேவைப்படுவோர் யாழ்ப்பாணம் நீராவியடி வீதியில் உள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரிக்கு இன்று மாலை 4மணிக்கு முன்னதாக வருகை தந்து பயன் பெற முடியும் என ஏற்பாட்டாளர்களான யாழ்ப்பாணம்  றோட்டறி கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் 70 பயனாளிகளுக்கு செயற்பாட்டு திறனுடைய செயற்கை கைகள் பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.