பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜூன், 2015

விடுதலைப் புலிகள் காலத்தில் போதைபொருளே கிடையாது! விக்னேஸ்வரன் சீற்றம்!



போதைப் பொருளைக் கட்டுப்படுத்துவது குறித்த கலந்துரையாடல் ஒன்று கொழும்பிலுள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவுத் தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கலந்துகொண்டார். 

அப்போது, வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் வியாபார நடவடிக்கைகளை முன்னாள் புலிகள் மேற்கொள்கின்றனர். இதன் காரணமாகவே வடபகுதியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருக்கின்றது என்று போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் குற்றம் சாட்டினர்.

இதனை மறுத்து பேசிய வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன், போருக்குப் பின்னரே வடபகுதியில் போதைப் பொருள் அதிகரித்துள்ளது. இப்போது விடுதலைப் புலிகள் இல்லை. வடக்கில் இடம்பெறும் குற்றச் செயல்களைத் தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டுமே தவிர அவற்றுக்கு காரணம் கண்டுபிடித்து இல்லாதவர்கள் மீது பழி சுமத்தி அதிலிருந்து தப்பிக்கக் கூடாது என்று தெரிவித்தார்.