பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜூன், 2015

பிரபலங்கள் மீது எப்படிப் பழிபோடுவீர்கள்? நூடுல்ஸ் சர்ச்சையில் குஷ்பு கேள்வி!



‘மேகி நூடுல்ஸ்’ உணவுப் பொருள் விளம்பரங்களில் நடித்த நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய பிகார் மாநிலத்தின் முஸாஃபர்பூர் மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. வழக்கு விசாரணைக்குத் தேவைப்பட்டால் அமிதாப் பச்சன் உள்ளிட்ட 5 பேரையும் காவல் துறை கைது செய்யலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இதனால் திரைத்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சர்ச்சை தொடர்பாக நடிகை குஷ்பு ட்வீட் செய்துள்ளார். அதில் அவர்,

‘நெஸ்லே போன்ற ஒரு நிறுவனத்தின் உணவுப்பொருளை உணவு அமைப்பு அங்கீகரித்த பின்பே அது கடையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் பிரபலங்கள் மீது எப்படிப் பழிபோடுவீர்கள்? கடையில் ஒரு பொருள் விற்கப்படுவதற்கு முன்பு அதைச் சோதனை செய்யமாட்டார்களா? அல்லது அதை நாம் தலைகீழாகத்தான் செய்வோமா? முதலில் பொருள் வாங்கப்பட்டு, உடல்நலக் குறைவு ஏற்பட்டபிறகு சோதனை செய்வோமா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.