பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜூன், 2015

கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு 
கிளிநொச்சி  அம்பாள்குளம் பகுதியில் வீட்டுக்கிணறு ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலத்தை கிளிநொச்சிப் பொலிஸார் மீட்டுள்ளனர். 
 
சில மணிநேரத்திற்கு முன்னரே குறித்த சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.  இவ்வாறு மீட்கப்பட்டவர் அம்பாள்குளத்தைச் சேர்ந்த மரியதாஸ் உசாராணி (வயது 36 ) என்பவராவார்.
 
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 
 
குறித்த பெண் மனநலம் குன்றியவராவார். தனது சகோதரியுடனேயே வசித்து வருகின்றார். இன்றையதினம் சகோதரி கடைக்குச் சென்றிருந்த சமயம்  வீட்டிலிருந்த கயிற்றின்  உதவியுடன் கிணற்றிற்குள் இறங்கியுள்ளார். 
 
மீண்டும் வெளியில் வரமுடியாது தவித்துள்ளார். அந்தநிலையில் வீட்டிற்கு வந்த சகோதரி கிணற்றில் இருப்பதனை கண்டு வெளியில் எடுப்பதற்கு பெரும் முயற்சி எடுத்துள்ளார்.
 
முயற்சி பயனளிக்கவில்லை. நீரில் மூழ்கி குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டார். மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.