பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜூன், 2015

முன்னாள் ரி ஆர் ரி,தற்போதைய டான் டிவி பொறுப்பாளர் எஸ் எஸ் குகநாதனின் வங்கி கணக்குகளை ஆராயக.நீதிமன்றம்

புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் கப்பில ஹெந்த வித்தாரன மற்றும் கொழும்பு பௌத்தாலோக வீதியில் அமைந்துள்ள டான் தொலைக்காட்சியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்
எஸ்.எஸ் . குகநாதன் ஆகியோருக்கு எதிராகவே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் கப்பில ஹெந்தவித்தாரனவின் வங்கிக் கணக்கு விபரங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்த இரண்டு பேரின் வங்கிக் கணக்கு விபரங்களை பரிசீலனை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்துள்ளதாகவும் அந்தப் சொத்துக்கள் வெளிநாட்டு வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இருவரது பெயர்களிலும் இலங்கை நிதி நிறுவனங்களில் காணப்படும் கணக்குகள் பற்றிய விபரங்களை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ், நாட்டின் சகல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் முகாமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் கோரிக்கைக்கு அமைய நீதவான் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.