பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜூன், 2015

மகிந்தவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தினால் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவு கிடைக்காது: எஸ்.பி.திஸாநாயக்க


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிறுத்தப்பட்டால், சிறுபான்மை கட்சிகள் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவு முன்னணிக்கு கிடைக்காது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று முன்வைக்கப்பட்டு வரும் நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவு எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு அவசியம் எனவும் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள அவரது ஆதரவாளர்களும்,ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள சில கட்சிகளின் தலைவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனினும் முன்னாள் ஜனாதிபதியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த தாம் தயாரில்லை என அந்த கட்சிகளின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.