பக்கங்கள்

பக்கங்கள்

5 ஜூன், 2015

மற்றுமொரு தமிழர் கட்டுநாயக்கவில் கைது


மத்திய கிழக்கு நாடொன்றில் கடமையாற்றி நாடு திரும்பிய இலங்கை தமிழர் ஒருவர்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள தமிழர், அம்பாறை காரைதீவைச் சேர்ந்த 39 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
2006ம் ஆண்டு டுபாய் சென்ற குறித்த நபர் 2011ம் ஆண்டு நாடு திரும்பியிருந்தார். ஒப்பந்த காலம் முடிவடைந்ததன் பின்னர் அவர் நாடு திரும்பியிருந்தார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் மீண்டும் டுபாய்க்கு பணி நிமித்தம் சென்றுள்ளார்.
கருணா அம்மான் உள்ளிட்ட தரப்புடன் தொடர்புகளைப் பேணியதாகத் தெரிவித்து கடந்த காலங்களில் இந்த கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றதன் பின்னர் விமான நிலையத்தில் வைத்து 16 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.