பக்கங்கள்

பக்கங்கள்

25 ஜூன், 2015

யாழ் பல்கலைக்கழக மாணவி முகநூலில் இளைஞன் ஒருவன் செய்த அநாகரீக செயலால் தற்கொலை



கிளிநொச்சி மாவட்டம் பளையில் கராந்தாய் எனும் இடத்தில் நேற்றுக் காலை  பல்கலைக் கழகத்தில் இறுதியாண்டில் பயிலும்
24 வயதுடைய மாணவி தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார்.
பானுசா சிவப்பிரகாசு எனும் இந்த யுவதியின் பெயர், தொலைபேசி எண் என்பவற்றை முகப்புத்தகத்தில் பதிவிட்டு ஒரு இளைஞன் இழிவுபடுத்தியதே தற்கொலைக்கான காரணமென பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் அறிந்து பானுசாவின் தந்தை அந்த இளைஞனின் வீட்டுக்கு நியாயம் கேட்க சென்ற போது அந்த இளைஞனின் தந்தை தன்னை மிரட்டியனுப்பியதாக பானுசாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
அந்த யுவதி மூன்று நாட்களாக தொடர்ந்து அழுது கொண்டிருந்ததாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார். மேலும் இவர் முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்ததில் ஒரு கண்ணில் காயப்பட்டு அங்கிருந்து உயிர் தப்பி சற்றும் தளராமல் தனது கல்வியை தொடர்ந்தார்