பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜூன், 2015

பிரதமராவது உறுதி! உறுப்பினர்களுக்கு நம்பிக்கை கொடுத்த மஹிந்த!


நாடாளுமன்றத்தை கலைத்த பின்னர் முதல் தடவையாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர்கள் குழுவொன்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளது.
இந்த சந்திப்பு முன்னாள் ஜனாதிபதியின் நுகேகொடை, மிரிஹான வீட்டில் நேற்று இடம்பெற்றுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியை பிரதமராக்குவதற்காக தேர்தலுக்கு தயாராகுமாறு நாங்கள் மக்களிடம் கூறுகின்றோம், என இச்சந்திப்பின் பின்னர் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ குறிப்பிட்டிருந்தார்.
குறித்த சந்திப்பிற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் கலந்து கொண்டுள்ளார்.
குறித்த சந்திப்பின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி, நான் பிரதமராகிவிடுவேன் நீங்கள் அனைவரும் பயமின்றி செல்லுமாறு குமார் வெல்கமவிடம் குறிப்பிட்டார் என அவர் சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளார்.