பக்கங்கள்

பக்கங்கள்

5 ஜூன், 2015

வேளாங்கண்ணி அருகே பிரபாகரனுக்கு கோயில் கட்டி வழிபாடு!


நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு தி.மு.க. நிர்வாகி ஒருவர் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
வேளாங்கண்ணி அருகே உள்ளது தெற்கு பொய்கை நல்லூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம். தி.மு.க. நிர்வாகியான இவர், தனது கிராமத்தில் பெரியாச்சி அம்மன் கோயில் ஒன்றை கட்டியுள்ளார்.

இந்த கோயிலில் இடது மற்றும் வலதுப் பக்கத்தில் இரண்டு குதிரைகளை வைத்துள்ளார். இந்த குதிரைகளுக்கு அருகில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் முழு உருவ சிலையை வைத்துள்ளார் மாணிக்கம்.

இந்த கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளை நடத்தி அசத்தியுள்ளார் மாணிக்கம்.

தமிழகத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு கோயில் கட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.