பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜூன், 2015

வடக்கில் காவல் நிலையங்களே மூடப்பட்டன இராணுவ முகாம்களல்ல :ஒப்புக் கொண்டது படைத்தலைமையகம்


தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்த விட்டுக் கொடுப்பும் கிடையாது எனத் தெரிவித்துள்ள இராணுவத் தலைமையகம்,யாழ்ப்பாணத்தில்
இருந்த புறக்காவல் நிலைகள் மூடப்பட்டன என்று தெரிவித்துள்ளது.
 
புதிய அரசு அமைந்த பின்னர் வடக்கில் 59 இராணுவ முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த தரப்பினர் சிங்கள் மக்கள் மத்தியில் பரப்புரை  செய்து வருகின்றனர்.
 
இந்தக் குற்றச்சாட்டுக்கு இராணுவத் தலைமையகம் பதிலளித்துள்ளது.
 
அது விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.அதன்பின்னர் ஒழுங்கான முறையில் பாதுகாப்பு நிலைமைகள் மீளாய்வு செய்யப்பட்டு படை நிலைகள் மாற்றியமைக்கப்பட்டன.என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.