பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜூன், 2015

முன்னாள் ஜனாதிபதி கூட்டணியிலே போட்டியிடுவார்: உதய கம்மன்பில உறுதி


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியிலே போட்டியிடுவார் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில் தெரிவித்துள்ளார்.
பி.பி.சி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தான் ஐக்கிய மக்கள் சுநத்திர கூட்டணியில் போட்டியிடுவதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தமை தொடர்பில் அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் போட்டியிடுவதற்கு வெளிப்படையாக, வாய்ப்பு கிடைக்கும் எனவும் அதற்கான மூலோபாய நடவடிக்கைகளை ஊடகங்களுக்கு தெரியப்படுத்துவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பது கை சின்னம் அல்ல, டார்லி வீதியில் உள்ள கட்சி அலுவலகம் அல்ல, மஹிந்த ராஜபக்ச எவ்விடத்தில் உள்ளாரோ அவ்விடத்திலே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.