பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜூன், 2015

நீதிமன்றத்தை தாக்கியதாக வீடியோவில் ஆதாரம்; மூவரை ஆஜர்ப்படுத்தியது பொலிஸ் நீதிமன்றம்

தாக்கப்பட்டமை தொடர்பில் 130 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் மேலும் பலர் தொடர்ந்தும்  கைது செய்யப்பட்டு
வருகின்றனர்.
 
அதனடிப்படையில் நேற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். 
 
அத்துடன் குறித்த மூவரும் நீதிமன்ற தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்பதற்கு வீடியோ ஆதாரங்கள் உள்ளன எனவும் அதனடிப்படையிலேயே மூவரும் கைது செய்யப்பட்டனர் என்றும்  பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.  
 
அதனடிப்படையில் குறித்த சந்தேக நபர்களிடம்  விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி அவர்களில் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன் ஏனைய இருவரும் தாங்கள் சந்தியில் நிற்கும் போது பொலிஸார் படம் எடுத்தனர் என்றும் தெரிவித்தனர். 
 
இவர்களை விசாரணை செய்த நீதவான்  சிவகுமார் குறித்த மூவரையும்  எதிர்வரும்  12 ஆம் திகதி வரைக்கும்  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.