பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜூன், 2015

வெளிநாடுகளில் பிறந்த குழந்தைகளுக்கு பிரஜாவுரிமை


இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ளுர் பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளுக்கு இலங்கை பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கான நடமாடும் சேவை நாளை தென்மராட்சி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த நடமாடும் சேவை இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் குழந்தைகளை பிரசவித்த இலங்கைப் பெற்றோர், தற்போது மீண்டும் தாய்நாட்டில் வாழ்ந்து வருகையில் அவர்களின் குழந்தைகளுக்கு இந்நாட்டின் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே இந்த நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.
தென்மராட்சியிலுள்ள இத்தகைய பெற்றோர்கள் குறித்த நடமாடும் சேவை மூலம் நன்மையடையலாம் என ஏற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.