பக்கங்கள்

பக்கங்கள்

14 ஜூன், 2015

மகளைக் காணவில்லை ; சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு


பெண்ணொருவரை நேற்றுமுதல் காணவில்லை என பெற்றோர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
 
பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது,
 
யாழ்ப்பாணம், சுன்னாகம் கிழக்கு பகுதியைச் சேர்ந்த உதயகுமார் ஸ்டெலா (வயது 20 ) நேற்று காலை அயலிலுள்ள தேவாலயத்திற்குச் சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
 
 
தேடிய போதும் தகவல் எதுவும் தெரியவில்லை எனவும் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.