பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜூன், 2015

தென்னிலங்கையில் வசிக்கும் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்துவதற்கான அரசியல் கூட்டணி நாளை -னோ கணேசன்


தென்னிலங்கையில் வசிக்கும் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்துவதற்கான அரசியல் கூட்டணி நாளை அறிமுகப்படுத்தப்படுவதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டணியில் மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி, அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தொழிலாளர் தேசிய முன்னணி, இராஜாங்க அமைச்சர் வி இராதாகிருஸ்ணனின் மலையக மக்கள் முன்னணி ஆகியன இணையவுள்ளன.
இந்தநிலையில் கூட்டணிக்கான பெயர் நாளை அறிவிக்கப்படவுள்ளது.
இந்தக் கூட்டணி, வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துதை நோக்காகக் கொண்டு செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.