பக்கங்கள்

பக்கங்கள்

22 ஜூலை, 2015

15 வயது மாணவி கூட்டு வன்புணர்வு- சந்தேகநபர்கள் கைது

அம்பலாங்கொடை பகுதியில் 15 வயதான பெண் பிள்ளையொன்று வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பலரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மாணவி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமைக்கான காரணமும் வெளியாகியுள்ளது.
குறித்த மாணவி தனது காதலனின் சகோதரியை மோசமாக திட்டியுள்ளார்.
இதற்காக பழிவாங்க நினைத்த அப் பெண்  குறித்த மாணவியின் வீட்டுக்கு வந்து அவரது காதலன்  அதாவது பெண்ணின் சகோதரன் விஷம் குடித்துவிட்டதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் அவரை தனது வீட்டுக்கு கொண்டு சென்று வீட்டைப் பூட்டி  அதன் சாவியை சந்தேகநபர்களுக்கு வழங்கியுள்ளார்.
அவர்கள் அம் மாணவியை தொடர்ச்சியாக வல்லுறவுக்குட்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த பெண் தனது கணவனிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருபவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.