பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜூலை, 2015

கதிர்காமக் கந்தன் வருடாந்த திருவிழா 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்



வரலாற்றுப் பெருமை வாய்ந்ததும் அற்புதங்கள் பலவற்றை கொண்டதுமான கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா எதிர்வரும் 17 ஆம் திகதியான ஆடி முதலாந்திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.


இதனையொட்டி தினமும் முருகப்பெருமானது திருவூர்வலம் 31 ஆம் திகதி வரை நடைபெறும்.



இம்மாதம் 28 ஆம் திகதி தீமிதிப்பும், 31 ஆம் திகதி தீர்த்தோற்சவமும் இடம்பெற்று அதேமாதம் முதலாம் திகதியுடன் திருவிழா நிறைவுபெறவுள்ளது.


அதேவேளை, கதிர்காமத் திருவிழாவை முன்னிட்டு பண்டாரவளையிலிருந்து இணைந்த புகையிரத பஸ்சேவைகள் வழமைபோல் நடைபெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பண்டாரவளை கிளை தெரிவித்துள்ளது.


ஆறுமுகப் பெருமானுக்குரிய ஆடித்திருவிழாவுடன் பதுளை மாவட்டத்தில் மட்டுமன்றி அனைத்து முருகன் ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகளும் திருவிழாக்களும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.