சாம்பியன்ஸ் லீக் டி-20 தொடர் ரத்து! பி.சி.சி.ஐ அறிவிப்பு |
சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் ரத்து செய்யப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில் பிரிமியர் தொடரில் முதல் 3 இடம் பெற்ற அணிகள் மற்றும் அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவில் நடந்த உள்ளூர் டி-20 தொடரில் முதல் இரு இடம் பெற்ற அணிகள் பங்கேற்றன.
இந்நிலையில் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இல்லாத காரணத்தால் சாம்பியன்ஸ் லீக் தொடரை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பி.சி.சி.ஐ, கிரிக்கெட் அவுஸ்திரேலியா, தென் ஆப்piரிக்க கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள்,விளம்பரதாரர்கள் மற்றும் தொடர் சம்பந்தப்பட அனைத்து தரப்பினரிடமும் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் ரத்து செய்யப்படும் பட்சத்தில் “மினி ஐ.பி.எல்” தொடர் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது
|
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼