பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜூலை, 2015

திருகோணமலை மனிதப் புதைகுழியிலிருந்து மேலும் 6 எலும்புகூடுகள் மீட்ப்பு

திருகோணமலை மனிதப்புதைகுழியில் இருந்து மேலும் 6 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது.அத்துடன் இதுவரை மீட்க்கப்பட்ட மனித எலும்புகூடுகளின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.
 
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி மக்கெய்ஸர் விளையாட்டு மைதானப் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இந்த பகுதியில் சில மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.
 
இதேவேளை மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் ஏற்கனவே நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்ததுடன் குறித்த பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி டி. சரவணராஜா முன்னிலையில் கடந்த திங்கட்கிழமை மீண்டும் அகழ்வுப்பணிகள் ஆரம்பமான போது மேலும் சில மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.
 
மீட்கப்பட்ட எலும்புகூடுகளை சட்ட மருத்துவ அதிகாரியின் பாதுகாப்பில் வைக்குமாறு பொலிஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.