பக்கங்கள்

பக்கங்கள்

22 ஜூலை, 2015

சூனியம் வைக்க கடத்தப்பட இருந்த வறுத்து எடுத்த குழந்தைகளின் 6 உடல்கள்

PM IST
பாங்காங்கில் 6 இறந்த குழந்தைகளின் உடலை வைத்து இருந்ததாக போலீசார் ஒருவரை கைது செய்து உள்ளனர்.இங்கிலாந்தில் வாழ்ந்து வருபவர்  சோவ் ஹோக் குவுன் இவர் தவான் பெற்றோருக்கு ஹாங்காங்கில் பிறந்தவர். சில நாட்களுக்கு சில மாதங்களில் இறந்த  குழந்தைளின் 6 உடல்களை ரூ 4 லட்சம்  (சுமார் 6400 டாலர் ) கொடுத்து விலைக்கு வாங்கினார். இதனை தவானுக்கு அவர் கடத்த திட்டமிட்டு இருந்தார்.

இந்த நிலையில் தகவல் கிடைத்த பாங்காங் போலீசின் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவினர் ஹாங்காங் ஓட்டல் ஒன்றில் இருந்து இவற்றை கைப்பற்றினர். மேலும் வேறு ஒரு ஓட்டலில் தங்கி இருந்த சோவ் ஹோக்கை கைது செய்தனர். கைபற்றபட்ட குழந்தைகள் உடல்கள் அனைத்தும் 2 முதல் 7 மாத கருவாக இருந்தன. இவை அனைத்தும் வறுக்கபட்டு தங்க இழைகளால் சுற்றி வைக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து போலீஸ் அதிகாரி  கம்சம்னன் கூறும் போது இதை சோவ் விற்க  திட்டமிட்டு இருந்தார். இவைகள் வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டமாகவும்  பணகாரராகவும் மாறலாம் என வாடிக்கையாளர்கள் நம்புகின்றனர். சூனியம் மற்றும் மந்திர தந்திர செய்ல்களுக்கு இணையதள விளம்பரம்  மூலம் பணக்கார வாடிக்கையாளர்கள் கேட்டு உள்ளனர். என கூறினார்.இந்த குற்றத்திற்கு சோவ்க்கு ஒருவருடம் வரை சிறைதண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.