பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜூலை, 2015

இலங்கையுடனான ஒருநாள் சர்வதேச போட்டி: பாகிஸ்தான் 7 விக்கெட்களால் வெற்றி

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் பாகிஸ்தான்
அணி 7 விக்கெட்களால் வெற்றிபெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 256 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பில் லஹிரு திரிமான்ன 90 ஓட்டங்களையும் தில்ஷான் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமட் இர்பான் 5 விக்கெட்களையும் அன்வர் அலி 3 விக்கெட்களையும் யகாத் அலி யசிர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு 257 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 40.5 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 257 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றிபெற்றது.
பாகிஸ்தான் சார்பில் அஹமட் ஷெசாட் 95 ஓட்டங்களையும் மொஹமட் ஹபீஸ் 70 ஓட்டங்களையும் பெற்றனர். இதன்படி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் பாகிஸ்தான் மூன்றுக்கு 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.