பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜூலை, 2015

வங்கியின் முட்டாள்தனம்: ரூ.95 ஆயிரம் கோடிக்கு அதிபதியான வேலைக்காரப் பெண்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ வங்கி கிளையின் சிறு தவறால் பெண் ஒருவரின் சேமிப்பு கணக்கில் ரூ.95 ஆயிரம் கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது.
கான்பூர் பகுதியில் வசிக்கும் ஊர்மிளா யாதவ் என்ற பெண், தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ வங்கியின் கிளையில் சில மாதங்களுக்கு முன்னர் 2 ஆயிரம் ரூபாய் செலுத்தி சேமிப்பு கணக்கை தொடங்கினார்.
இந்நிலையில் இவரது கைபேசி எண்ணுக்கு வந்த குறுந்தகவலில் அவருடைய சேமிப்பு கணக்கில் 95 ஆயிரத்து 71 கோடியே 16 லட்சத்து 98 ஆயிரத்து 647 ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊர்மிளா இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்கு நேரில் சென்று விசாரித்துள்ளார்.
இதுதொடர்பாக விளக்கம் அளித்த வங்கி அதிகாரிகள், ஊர்மிளா கணக்கு தொடங்கிய போது கட்டிய 2 ஆயிரம் ரூபாயையும் எடுத்து விட்டதால் அவரது கணக்கை மூடும் போது இந்தப் பிழை நேர்ந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.