பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜூலை, 2015

அனைவரும் இணைந்து தமிழ் மக்களின் விடுதலைக்காக பாடுபடுவோம்; மாவை சேனாதிராசா

தமிழரின் இலட்சியத்தை தோற்கடிக்க நினைப்போருக்கு பாடம் புகட்டுங்கள் என வடக்கு கிழக்கு மக்களிடம் தமிழ் அரசு கட்சியின்  தலைவரும் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராசா.

 
அவர் மேலும் தெரிவிக்கையில், 
 
போர்க்குற்ற விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சர்வதேச சமூகத்திடம் நாம்  வேண்டுகோள்  விடுத்துள்ளோம். அந்த விசாரணையின்  அடிப்படையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பான  விடயங்களும் உள்ளடங்கியதால் நாம் பலமாக இருந்தால் விசாரணைகளை மேலும் விரிவுபடுத்த முடியும்.
 
இதற்கு மக்களின் வாக்கு பலம் எமக்கு கிடைக்க வேண்டும். தமிழர்களின் ஆயுதப் போராட்டம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில்  மௌனித்தது. அதனையடுத்து தமிழ் மக்களை தோற்றுப்போன இனமாக மகிந்தவை எமது சமூகமே தோற்கடித்து வரலாறு படைத்தது. 
 
அதேபோன்று எமது கோள்கைகளை எமது மண்ணிலேயே தோற்கடிக்க நினைப்போருக்கு இந்தத் தேர்தல் மூலம் பாடம் புகட்ட வேண்டும் .வடக்கு கிழக்கில் உள்ள எமது வேட்பாளர்கள் அனைவரையும்  வெற்றிபெறச் செய்து தமிழ் இனம்  எப்போதும் எமக்கு அடிபணியமாட்டாது என்பதனை தெளிவாக எடுத்துக் காட்ட வேண்டும்.
 
இந்த தேர்தலில் நாம் தோல்வி அடைந்தால் வேட்பாளர்களுக்கு கிடைத்த தோல்வி அல்ல எமது இனத்திற்கு கிடைத்த தோல்வி ஆகும்.
 
கடந்த பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு எமக்கு இராணுவத்தினர் மற்றும்  புலனாய்வாளர்கள் பெரும் தடையாக இருந்தனர். இதனால் வாக்களிப்பு வீதம்  குறைக்கப்பட்டது.எனவே அவ்வாறான நிலை தற்போது இல்லை . எனவே மக்கள் அனைவரும்  சென்று தங்களுடைய வாக்குகளை செலுத்த வேண்டும். 
 
அத்துடன்  முன்னாள் ஜனாதிபதி தான்  மேற்கொண்ட ஊழல்களில் இருந்து தப்பிக்க தேர்தலில் போட்டியிடுகின்றார். எனவே வடக்கு, கிழக்கு, தெற்கு உள்ளிட்ட நாட்டு மக்கள் அனைவரும் அவருக்கு இடம்கொடுக்க கூடாது. 
 
அனைவரும் இணைந்து மக்களின் விடிவுக்கு பாடுபடுவோம் என அவர் மேலும்  தெரிவித்தார்.