பக்கங்கள்

பக்கங்கள்

13 ஜூலை, 2015

பா.ஜனதாவில் சேரப் போவதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது-மு.க.அழகிரி

மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ள ஒரு விழாவில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொள்கிறார். அப்போது
அவரது முன்னிலையில் மு.க.அழகிரி பா.ஜனதா கட்சியில் சேரப் போவதாக தகவல் பரவியது.

இதுகுறித்து மு.க.அழகிரியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

நான் பா.ஜனதாவில் சேரப் போவதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது. என்னுடைய தலைவர் அண்ணா. அவருக்கு பின்னால் கலைஞர் கருணாநிதி தான். என்னுடைய கட்சி தி.மு.க. தான். நான் கருணாநிதியை தலைவராக ஏற்றுக் கொண்டு இருக்கிறேன். அவர் என்னை தொண்டனாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்காக நான் ஒன்றும் செய்ய முடியாது.

நான் மீண்டும் தி.மு.க.வில் எப்போது இணைவேன் என்பது பற்றி எல்லாம் எதுவும் தெரியாது. அந்த நல்ல நாளுக்காக தொண்டர்கள் காத்திருக்கிறார்கள் என்றால், அந்த நல்ல நாள் எப்போது வரும் என்றும் நான் எதுவும் சொல்ல முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.