பக்கங்கள்

பக்கங்கள்

14 ஜூலை, 2015

வித்தியா கொலைச் சந்தேக நபர்களைத் தடுத்துவைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!


 புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை ஓகஸ்ட் 12ஆம் திகதி வரை தடுத்துவைத்து விசாரணை செய்ய நீதிமன்றம்
அனுமதியளித்தது.
 
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இதற்கான அனுமதியை வழங்கினார்.
 
வித்தியாவுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் 9 பேரும் இன்று  (13) கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
 
யாழ்ப்பாணத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகின்ற போதிலும் தேர்தல் காலம் என்பதைக் கருத்திற்கொண்டு இவர்கள் இன்றைய தினம் கொழும்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
 
இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.