பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜூலை, 2015

ஒரு ரூபாய்க்கு விமான கட்டணம் ஸ்பைஸ்ஜெட் சலுகை அறிவிப்பு

ஸ்பைஸ்ஜெட்  விமான நிறுவனம் வாடிக்கையாளர் எண்ணிக்கையை உயர்த்தவும், சக போட்டி நிறுவனங்களை எதிர்கொள்ளவும் அதிரடி சலுகையை அ
றிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் 1 லட்சம் டிக்கெட்களை 1 ரூபாய் என்ற சலுகை விலையில் விற்பனை செய்ய இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இச்சலுகையைப் பெற விமானப் பயணிகள் தங்களது பயணத்தை ஜூலை 15, 2015 முதல் மார்ச் 31,2016ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் முடிவு செய்ய வேண்டும்.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து நினைவூட்டும் வகையில் அதிகப் பொருட் செலவில் உருவாக்கப்பட்ட மொபைல் ஆப்-களை வாடிக்கையாளர் மத்தியில் பிரபலமடையச் செய்யவும், அதிகளவில் பதிவிறக்கம் செய்யத் திட்டமிட்டே 1 ரூபாய் சலுகையை அறிவித்துள்ளது.

இச்சலுகையில் அறிவிக்கப்பட்ட 1,00,000 டிக்கெட்டுகள் அடுத்த 3 நாட்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. 1 ரூபாய் சலுகை என்பது, வரி மற்றும் கட்டணங்கள் இல்லாமல் அளிக்கப்படும் கட்டணம். இந்த சலுகைஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் Android மொபைல் பயன்பாட்டுக்கு  மட்டுமே
மேலும் 1 ரூபாய் சலுகை பெற பயணிகள் இரு வழிசேவையில் டிக்கெட்களைப் பதிவு செய்ய வேண்டும். ஆனால் கட்டண சலுகை ஒரு வழியில் மட்டுமே கிடைக்கும்.

இச்சலுகையில் விற்பனை செய்யப்படும் டிக்கெடுகளின் கட்டணங்கள் திரும்பப்பெற இயலாது இதை மனதில் கொண்டு டிக்கெட்களை முன்பதிவு செய்ய வேண்டும்.