பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜூலை, 2015

சென்னையில் மாணவர்கள் கரும்புலிகளுக்கு வீரவணக்கம்

தமிழீழ விடுதலைக்கான மாணவர் – இளைஞர் கூட்டியக்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட ”தனித் தமிழீழம் ஒன்றே தீர்வு ” என்ற இன எழுச்சிக் கருத்தரங்கம் இன்று சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல்வேறு மாணவர் அமைப்புகளும், அரசி்யல் கட்சிகளும், அமைப்புக்களும் பங்கேற்றன. தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இக்கருத்தரங்கத்தில் ஜாதிய வெறியர்களால் கொல்லப்பட்ட கோகுல்ராஜீக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின் மாணவர்கள் உரையாற்றினார்கள். அதன்பின் மக்கள் கவிஞர். இன்குலாப் கலந்துக்கொண்டு ஈழப்போரில் உயிர்நீத்த கரும்புலிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார். அவரைத் தொடர்ந்து மாணவர்களும் இளைஞர்களும் தமிழ் உணர்வாளர்களும் வீர வணக்கம் செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.