பக்கங்கள்

பக்கங்கள்

26 ஜூலை, 2015

டயமண்ட் லீக் போட்டியில் உசைன் போல்ட் வெற்றி


லண்டனில் இடம்பெற்ற டயமண்ட் லீக் போட்டியில் உலகின் குறுந்தூர ஓட்ட சம்பியன் உசைன் போல்ட் வெற்றி பெற்றுள்ளார்.
 
நேற்றைய தினம் லண்டனில் டயமண்ட் லீக் போட்டிகள் இடம்பெற்றன.
 
உலக சம்பியன்ஷிப் போட்டிகள் நெருங்கும் நிலையில் இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளதாலும் உலக சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான தயார்படுத்தல் போட்டியாக இது அமைந்துள்ளதாலும் பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டது.
 
இந்த போட்டியில் 100 மீற்றர் ஓட்டத்தில் உலக சம்பியனும் உலகின் குறுந்தூர ஓட்ட அதிவேக மனிதனுமான உசைன் போல்ட் சாதித்திருந்தார்.
 
2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் சாதித்த அதே நேரப் பிரதியான 9.87 எனும் ஓட்டப் பிரதியில் இந்த போட்டியிலும் உசைன் போல்ட் வெற்றி பெற்றார்