பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜூலை, 2015

முன்னாள் போராளிகளுக்கு சங்கரி அழைப்பு


பாராளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு முன்னாள் போராளிகளுக்கு
சந்தர்ப்பம் வழங்க தயாராகவுள்ளதாக கட்சியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி தெரிவி த்துள்ளார்.
முன்னாள் போராளிகள் போட்டியி டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பில் அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில் அதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆனந்த சங்கரியிடம் கேட்ட போதே அவர் இதை தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளே தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள், அவர்களே தேசியத் தலைவர்கள் என்று அவர்களது பெயரைக் கூறியே வளர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் போராளிகளுக்கு அரசியலில் சந்தர்ப்பம் வழங்க மறுத்துள்ளமை தவறான விடயமென இதன் போது அவர் சுட்டிக்காட்டினார்.
நேர்மையான, விசுவாசமான, தமிழர் களின் இனப்பிரச்சினை பற்றி நன்கு விளங்கியவர்களே நாடாளுமன்றம் செல்ல வேண்டும். இதற்கமைய முன்னாள் போராளிகளுக்கும் தேர்தலில் சந்தர்ப்பம் கொடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பியதைப் போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தோற்கடித்து முன்னாள் போராளிகள் நாடாளுமன்றம் செல்வதற்கு வழிவகுக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, வட மாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் விரும்பும் பட்சத்தில் அவருக்கும் தமது தொகுதி யில் சந்தர்ப்பம் வழங்கவுள்ளதாக ஆனந்த சங்கரி தெரிவித்தமை குறிப் பிடத்தக்கது.