பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜூலை, 2015

சஜின்வாஸ் குணவர்தனவை சாதாரண சிறைக்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு சரும நோய் இல்லை என
வைத்திய பரிசோதனைகள் மூலம் உறுதியாகியுள்ள நிலையில், அவரை உடனடியாக சாதாரண சிறைக்கைதிகள் தடுத்து வைக்கப்படும் சிறைக்கு மாற்றுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்திலுள்ள 16 வாகனங்களை சட்டவிரோதமாக பாவித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள வாஸ் குணவர்தன, தனக்கு சரும நோய் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், அவருக்கு சரும நோய் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் வைத்திய பரிசோதனை மூலம் உறுதிப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனைகளின் போது, சஜினுக்கு அவ்வாறானதொரு சரும நோய் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வைத்திய அறிக்கையை கருத்திற்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க குணதிலக்க, உடனடியாக வாஸ் குணவர்தனவை சாதாரண சிறைக்கைதிகள் தடுத்து வைக்கப்படும் சிறைக்கு மாற்றுமாறு  உத்தரவிட்டுள்ளார்.