பக்கங்கள்

பக்கங்கள்

14 ஜூலை, 2015

எம். எஸ். வி உடலுக்கு மு.க ஸ்டாலின் அஞ்சலி




மறைந்த இசையமைப்பாளர்  எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் :
 
இசை உலகில் வரலாற்று சாதனை படைத்தவர், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை யாராக இருந்தாலும் எல்லோரிடத்திலும் அன்போடு, பாசத்தோடு பழகக் கூடிய ஒருவர். கலைஞர் அவர்களோடு நெருங்கிய நட்பு கொண்டிருந்தவர்.


அவர் உடல் நலிவுற்று மறைந்த செய்தியை அறிந்த கலைஞர் மிகுந்த அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் ஆளாகியிருக்கிறார்.

அவரை இழந்து வாடிக்கொண்டிருக்கக் கூடிய அவரது குடும்பத்திற்கும், கலையுலகை சார்ந்த நண்பர்களுக்கும் கலைஞரின் சார்பிலும் திராவிட முற்போக்கு கழகத்தின் சார்பிலும் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.