பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜூலை, 2015

மஹிந்த புதிய கூட்டணியில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கவனம்?


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச புதிய கூட்டணி ஒன்றில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவற்றில் போட்டியிடாது புதிய கூட்டணி ஒன்றில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்ளையும் தற்போதைய ஜனாதிபதியின் ஆதரவாளர்ளையும் இணைக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒரே பட்டியலில் இரண்டு தரப்பினையும் போட்டியிடச் செய்வதனால் ஜனாதிபதி தரப்பின் நிபந்தனையை ஏற்றுக் கொள்ள வேண்டுமென மஹிந்த தரப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட சிலருக்கு வேட்பு மனு வழங்கப்படாது எனவும் அந்த நிபந்தனைக்கு இணங்கினால் வேட்பு மனு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தரப்பு அறிவித்துள்ளது.
எனினும், இந்த நிபந்தனையை மஹிந்த தரப்பு ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது.
இதனால் மஹிந்த தரப்பு தனியான வேட்பு மனு தயாரிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த புதிய கூட்டணியில் போட்டியிட 80 வாய்ப்புக்கள் உண்டு எனத் தெரிவிக்கப்படுகிறது.