பக்கங்கள்

பக்கங்கள்

3 ஜூலை, 2015

இலங்கையில் போதைப் பொருள் பாவிக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு


இலங்கையில் 18 வயதுக்கும் மேற்பட்ட வயதுடைய பெண்கள் மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக பியர் மற்றும் சாராய பாவனை வேகமாக அதிகரித்துள்ளதாக ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
 
படித்த, மத்திய தர, மற்றும் வசதி படைத்த பெண்கள் மத்தியில் இந்த மதுபான பயன்பாடு பரவியுள்ளமை பாரதூரமான நிலைமை என ஆபத்தன ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் கலாநிதி சாமர திலந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
 
அத்துடன் நாட்டில் ஹெரோயின் போதைப் பொருளுக்கு சுமார் 500 பெண்கள் அடிமையாகியுள்ளதாகவும் இவர்களில் பெரும்பாலானவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் எனவும் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
நாட்டில் போதைப் பொருள் பயன்பாட்டை குறைப்பதற்காக அரசியல்வாதிகளுக்கும் போதைப் பொருள் வர்த்தகத்திற்கும் இருக்கும் தொடர்பை துண்டிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்