பக்கங்கள்

பக்கங்கள்

16 ஜூலை, 2015

ஜனாதிபதியின் அவசர உத்தரவில் சு.க மத்திய குழு கூட்டம் நிறுத்தம்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை தொடர்பாக ஒரு தீர்மானம் ஒன்றை எடுக்கும் நோக்குடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்
மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட உத்தரவுக் கமைய நேற்று இடைநிறுத்தப் பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ்.எச்.ஆரியரட்ன தெரிவித்தார்.
ஜனாதிபதி தனக்கு அனுப்பிய கடிதத்துக்கு அமைய தான் இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அவர் தெரிவித்தார். இதன்படி பாராளுமன்றத் தேர்தல் ஒன்று நடைபெறும் காலத்தினுள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டமொன்றை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் எதிர்வரும் 17ஆம் திகதி அநுராதபுரத்தில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியின் தேர்தல் பிராசரக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ள மாட்டார் என்று தெரிவித்த நிர்வாகச் செயலாளர், எதிர்காலத்தில் கட்சியினுள் விசேட தீர்மானங்கள் சிலவற்றை எடுக்கவுள்ள தாகவும் கூறினார்