பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜூலை, 2015

மினுவாங்கொடையில் கொள்ளை முயற்சியை தடுத்த கடை உரிமையாளர் சுட்டுக்கொலை


கொழும்பில் இருந்து சில கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள மினுவாங்கொடையில் இன்று நகையகம் ஒன்று கொள்ளையிடப்பட்ட வேளையில் அதன் உரிமையாளர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முகத்தை மூடிய நிலையில் மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர், நகையகத்துக்குள் சென்று நகைகளை கொள்ளையிட முயன்றுள்ளனர்.
இதன்போது அதனை தடுக்க உரிமையாளர் முனைந்தபோது அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றும் ஒரு பணியாளர் துப்பாக்கி சூட்டின்போது காயமடைந்தார்.
இந்த சம்பவத்தை அடுத்து கொள்ளையர்கள் நகைகளை கொள்ளையிடாமல் தப்பிசென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.