பக்கங்கள்

பக்கங்கள்

14 ஜூலை, 2015

மட்டக்களப்பில் த.தே.கூ வேட்பாளர்களுக்கு ஆதரவாளர்களால் மாபெரும் வரவேற்பு- மட்டு.மாவட்ட வேட்பாளர்கள் விபரம்


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்கள் ஆதரவாளர்களால் அழைத்து வரப்படும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.
இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களான சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், ஞா.ஸ்ரீநேசன், கு.சௌந்தரராஜா, கோ.கருணாகரம், இரா.துரைரெட்ணம், எஸ்.வியாளேந்திரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.
அத்தோடு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கும் இவர்களால் மலர் மாலை சூட்டப்பட்டது