பக்கங்கள்

பக்கங்கள்

5 ஜூலை, 2015

எம் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர் மகிந்த: மாவை


எமது மக்களைப் பார்த்து தோற்றுப்போன சமுதாயம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுகின்றார்.
ஆனால் வடக்கு-கிழக்கு மாகாணங்களிலே அனைத்து ஜனநாயக சந்தர்ப்பங்களிலும் எம் மக்களால் மஹிந்த தோற்கடிக்கப்பட்டார். இதுவே உண்மை. என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
 
யாழ்.நவபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
 
தமிழ் மக்களின் உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் நடத்தப்பட்ட போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அதனுடாக தாம் வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் கூறினாலும், கடந்த ஜனாதிபதி தேர்தலின் மூலம் அவரையே மக்கள் தோற்கடித்துவிட்டனர்.
 
இந்நிலையில் எம் மக்கள் அறிவும், ஆற்றலும், சிறந்த ராஜதந்திர சிந்தனையும் கொண்டவர்கள். அவர்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகின்றேன். என அவர் மேலும் தெரிவித்தார்.