பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜூலை, 2015

இலங்கை ஐ.எஸ். தீவிரவாதியின் குடும்பத்தினர் துருக்கியில் இருந்து ஈராக்கிற்கு தப்பியோட்டம்


ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து போராடிய இலங்கை தீவிரவாதியின் குடும்பத்தினர் ஈராக்கிற்கு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் ஐ.எஸ்  தீவிரவாதிகளுக்கு எதிரான வான் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த கலவெல பிரதேசத்தைச் சேர்ந்த நிலாம் முசீனின் குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர் துருக்கியிலிருந்து ஈராக்கிற்கு தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த பத்து பேரும் சுற்றுலா வீசா மூலம் கடந்த டிசம்பர் மாதம் துருக்கிக்கு சென்றிருந்தனர். இதனை துருக்கித் தூதுவர் இஸ்னேந்தர் ஓக்நாய் தெரிவித்துள்ளார்.
நிலாமின் கர்ப்பிணி மனைவி, நிலாமின் தாய் மற்றும் தந்தை ஆகியோரும் இந்தப் பத்து பேரில் உள்ளடங்குகின்றனர்.
நிலாமின் மைத்துனரான நஜூடீன் என்பவர் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்து கொண்டு சிரியாவில் போராடி வருகின்றார் தெரிவித்துள்ளார்.
நிலாம், டுவிட்டர் ஊடாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
இதேவேளை ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடைய 3000 இணைய தளங்கள் இயங்கி வருவதாக இன்டர்போல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் இலங்கை பொலிஸார், இன்டர்போலின் உதவியை நாடியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.