பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜூலை, 2015

தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடுவதால் மக்கள் குழப்பம் : யாழ்.ஆயர்


தேர்தலில் பலதரப்பட்ட கட்சிகள் போட்டியிடுவதால் மக்கள் குழப்ப நிலையில் உள்ளதாக யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் தெரிவித்துள்ளார்.

 
இன்று காலை 9.30 மணியளவில் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் யாழ்.மாவட்ட இணைப்பாளர் சந்திரசேகரன் ஆகியோர் யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகத்தை யாழ்.ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
 
இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் சந்திரசேகரன்,
 
வடமாகாணத்தில் பலதரப்பட்ட பிரச்சினைகள் எழுந்துள்ளன.அவற்றுள் மக்கள் மத்தியில் எழும் பிரச்சினைகள் வெகுவிரைவில் தீர்க்கப்பட வேண்டும். 
 
 குறிப்பாக தேசிய ஒற்றுமையை சிதைக்கின்ற நடவடிக்கையை சில அரசியல் தலைவர்கள்  முன்னெடுத்து வருகின்றார்கள்.
 
ஆகவே நாட்டின் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்பும் சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.