பக்கங்கள்

பக்கங்கள்

31 ஜூலை, 2015

கொழும்பு புளூமெண்டல் தாக்குதல் சம்பவம்! பின்னணயில் விமல் வீரவன்ச?


கொழும்பு - புளூமெண்டல் பிரதேசத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்துக்கு வேறு விதமான விளக்கத்தினை கொடுக்க முன்னணி வேட்பாளர் விமல் வீரவன்சவின் இணையத்தளம் முயற்சித்து வருகின்றது.
இந்த சம்பவமானது பாதாள உலக குழுக்கள் இரண்டிற்கு இடையிலான மோதல் என பிரச்சாரம் செய்து வருகின்றது.
இது தொடர்பில் உண்மையான தகவல்களை வெளிப்படுத்த வேண்டாம் என ஐக்கிய தேசிய கட்சி அழுத்தம் கொடுத்து வருவதாக விமல் வீரவன்சவின் இணையத்தளம் செய்தி வெளியிட்டு வருகின்றது.
தெளிவாக ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில், துப்பாக்கி பிரயோம் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, அதற்கு அவசியமான சாட்சிகளும் தெளிவாக உள்ளதென காவல்துறை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
எப்படியிருப்பினும் இதற்கு பாதாள உலக குழுக்களை தொடர்புபடுத்தி போலியான செய்திகளை வெளியிடுவதன் மூலம் விமல் வீரவன்சவுக்கு குறித்த சம்பவத்துடன் தொடர்புள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் முழுமையான விசாரணைகள் ஆரம்பித்துள்ள போது, இது தொடர்பில் முன்னுக்கு பின் முரணான செய்திகளை விமல் வீரவன்சவின் இணையத்தளம் வெளியிடுவது எந்த அடிப்படையில் என சந்தேகம் எழுந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதற்கு முன்னர் இவ்வாறான பல்வேறு போலியான செய்திகளை வெளியிடுவதோடு குறித்த இணையத்தளம் விமல் வீரவன்சவின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்குவதாகவும் தெரியவந்துள்ளது.