பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜூலை, 2015

லண்டனில் கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியொன்றின்பந்து பட்டதால் ஈழத்தமிழ் இளைஞன் மரணம்


லண்டனில் கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியொன்றில் களமாடிக் கொண்டிருந்த ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர், வேகமாக வீசிய பந்து
நெஞ்சுப்பகுதியில் பட்டதால் மூர்ச்சையுற்று விழுந்து அந்த இடத்திலேயே இறந்துள்ளார். பருத்தித்துறையை சொந்த இடமாக கொண்ட, ஹாட்லி கல்லூரி பழைய மாணவனான பாவலன் பத்மநாதன் எனப்படும் 22 வயது இளைஞனே இவ்வாறு இறந்தவர் ஆவார். பிரிட்டிஷ் தமிழ் கிரிக்கெட் லீக்கில் மானிப்பாய் பரீஷ் - புளுஸ் அணியின் நேற்றைய ஆட்டத்தின்போதே இந்த சம்பவம் நடைபெற்றது. சுமார் 44 அணிகளை கொண்ட பிரிட்டிஷ் தமிழ் லீக்கின் உறுப்பினர் நாதன் தீபராஜ் அண்மையில் காலமான செய்தியால் மனமுடைந்தபோயிருந்த கழக தோழர்களுக்கு நேற்றை சம்பவம் இன்னொரு இழப்பை ஏற்படுத்திச்சென்றிருக்கிறது. பாவலனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!நன்றி மனோ