பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜூலை, 2015

பேஸ்புக் பாவனையாளர்களுக்கு தேர்தல் ஆணையாளர் வேண்டுகோள்


[
தேர்தல் தொடர்பான விதி மீறல்கள் பற்றி பேஸ்புக்கில் தூற்றுவது எவ்விதத்திலும் பயனுள்ள ஒரு விடயம் அல்ல என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு அவ்வாறான ஏதாவது தேர்தல் விதி மீறல்கள் குறித்து தெரியுமிடத்து, தேர்தல் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலுள்ள ‘ஹிலீll விoசீசீissionலீr’ எனும் பகுதிக்குச் சென்று முறைப்பாடுகளைச் செய்யலாம் என தெரிவித்ததோடு, அதை விடுத்து ‘பொலிஸ் ஆணையாளர் தூங்குகின்றாரா?’ அல்லது ‘தேர்தல் ஆணையாளர் தூங்குகின்றாரா?’ என இடுகையினை பதிவு செய்வதிலிருந்து தவிர்ந்துகொள்ளுங்கள் என சமூக வலைத்தள பாவனையாளர்களிடம் வேண்டிக்கொண்டார்