பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜூலை, 2015

விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் புதிய கட்சி தொடக்கம்!

 விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் இணைந்து புதிய கட்சியை தொடங்கியுள்ளனர்.


இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக, தனி நாடு கேட்டு விடுதலைப்புலிகள் இயக்கம், அரசுக்கு எதிராக போராடி வந்தது. இந்நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின்போது, மே மாதம் 18-ந்தேதி விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.

இதையடுத்து, இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்குமான போர் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் இணைந்து புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் 'ஜனநாயகப் போராளிகள்' என்ற பெரில் அவர்கள் புதிய கட்சி தொடங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்பது குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.