பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜூலை, 2015

ஒரு கோடி பெறுமதியான ஹெரோயினுடன் பருத்தித்துறையினில் பெண் கைது!

யாழில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுவந்த குடும்பப் பெண் ஒருவரை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 29 வயதான குறித்த பெண்ணிடம் இருந்து சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமதியான 285 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.


குறித்த பெண் தன்னுடைய கணவருடன் இணைந்து மிக நீண்ட நாட்களாக ஹெரோயின் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தவர் என்றும், அப் பெண்ணின் கணவர் இவ் விற்பனையின் மிக முக்கியமான நபர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு வழங்கப்பட் இரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பெண்ணும் அவருடைய கணவரும் மிக நீண்ட நாட்களாக கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர். இன்று இவர்கள் பருத்தித்துறை தும்பளை மணல் ஒழுங்கை பகுதியில் வைத்து ஹெரோயின் விற்பனையில் ஈடுபடும் போது சுற்றிவளைக்கப்பட்டதாகவும், பெண்ணின் கணவர் தப்பி ஓடிவிட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

தப்பியோடியவரை தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர், கைது செய்யப்பட்ட பெண் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.