
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சுரேஸ் பிறேமச்சந்திரனின் ஈபிஆர்எல்எவ் சார்பில் முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் அனந்தராஜ் போட்டியிடவுள்ளமை உறுதியாகியுள்ளது. தனக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆசனங்களில் ஒன்றில் வடமாகா
ணசபை உறுப்பினர் அனந்தியை களமிறக்க சுரேஸ் முற்பட்டுள்ள போதும் அதற்கு மாவை சேனாதிராசா அனுமதித்திருக்கவில்லை. இதையடுத்தே வடமராட்சியின் கரையோர வாக்குகளை முன்னிறுத்தி அனந்தராஜை களமிறக்க சுரேஸ் முற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
எனினும் ஏற்கனவே வல்வெட்டித்துறை நகரசபை தலைவராக இருந்த அனந்தராஜ் மீது அவர் சார்ந்த கட்சியாக கூட்டமைப்பே ஊழல் குற்றச்சாட்டுக்களினை முன்வைத்திருந்த நிலையில் அவர் பதவியிழந்ததுடன் சபையும் கலைக்கப்பட்டிருந்தது.