பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜூலை, 2015

மகிந்த என்ன அவரது அப்பனே வந்தாலும் ஐ.தே.கட்சிக்கு பாதிப்பில்லை ; பாலித ரங்கே பண்டார


மகிந்த ராஐபக்ச மட்டுமல்ல மந்தவின் தகப்பனே வந்து தேர்தலில் போட்டியிட்டால் கூட ஐ.தே.கட்சிக்கு எந்த வித பாதிப்பும் வரப்போவதில்லை என மின்சக்தி
எரிசக்தி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே  பண்டார தெரிவித்தார்.
 
ஐ.தே.கட்சியின் நல்லூர் தொகுதிக்கான அலுவலகம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. அதன்பின்னர் ஊடகவியலாளரிடம் கருத்துத்தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
 
அவர் மேலும்  தெரிவிக்கையில், 
 
மேலும் கடந்த ஐனவரி தேர்தலின் போது முன்னாள்  ஜனாதிபதி மகிந்த பொலிஸ்,  இரானுவம் சமுர்த்தி பணியாளர்கள் ,பிரதேச செயலர்கள், அரச அதிபர்கள், அரச சொத்துக்கள் மற்றும் அரச பணம் போன்ற அனைத்து   அரசவளங்களையும் பயன்படுத்தி தான் தேர்தலில் போட்டியிட்டார்.
 
ஆனால் அவரால் வெற்றி பெறமுடியவில்லை இதுமட்டுமல்லாது இலங்கை சாத்திரிகள் இந்திய சாத்திரிகளின் ஆலோசனையில் நல்ல நேரம் காலம் போன்றவற்றை தெரிவு செய்தே தேர்தல் திகதி கூட தீர்மானித்தும் அவரால் வெற்றி பெற முடியவில்லை.
 
அத்தோடு நல்ல கிரகம் நல்ல காலம் இருந்த போதும் வெல்லமுடியாத மகிந்த இனி எவ்வாறு வெல்லப்போகிறார்? இதனை மக்கள் தீர்மானித்து கொள்ளட்டும். 
 
மகிந்தவுடன் தற்போது உள்ளவர்கள் எல்லோரும் மக்களால் தூக்கி வீசப்பட்ட மக்களால் ஒதுக்கப்பட்டவர்களும் போதைப்பொருளோடு சம்பந்தப்பட்டவர்கள் இந்நாட்டை அழித்தவர்கள் தான் இன்று மகிந்தவின் பின்னால் நிற்கிறார்கள்.
 
எனவே மகிந்த தேர்தலில் போட்டியிடுவது பற்றி ஐ.தே.கவுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. இத்தோடு முன்னைய தேர்தல் காலங்களில் அமைதி இருக்கவில்லை சமாதானம் இருக்கவில்லை. ஐனநாயகம் என்ற ஒன்றே இருக்கவில்லை. 
 
அப்போது துவக்குக்குரிய காலம். தேர்தலில்  ஒழுங்கான முறையில் பிரச்சாரம் செய்ய கூட சந்தர்ப்பம்  இருக்கவில்லை.
 
ஆனால் இன்று அவ்வாறில்லை  நல்லாட்சி அமைந்து ஐனநாயகம் பிறந்துள்ளது இனி நீதியான தேர்தல் நடைபெறுவதற்குரிய காலம் பிறந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=437564132407213348#sthash.fTCeEzvp.dpuf