பக்கங்கள்

பக்கங்கள்

31 ஜூலை, 2015


"நீதிமன்ற படிக்கட்டுகளை மிதிக்காத கஜேந்திரகுமார் இன்று இலங்கையின் தலைசிறந்த மனிதவுரிமை, அரசியல் யாப்பு சட்டத்தரணி ஆக விளங்கும் சுமந்திரனைப் பார்த்து முட்டாள் என்பது மிகவும் கண்டிக்கத் தக்கது."

தேர்தல் நாள் நெருங்க நெருங்க கஜேந்திரகுமார் தடித்த வார்த்தைகளை பயன்படுத்த தொடங்கியுள்ளார்.
"துரோகம்" "துரோகி" பற்றி அவர் பேசுவது வேடிக்கையானது. அந்த வார்த்தைகள் அவரது அப்புவுக்கும் அப்புவின் அப்வுக்கும்தான் பொருத்தமாக இருக்கும். அப்புவின் அப்பு 10,000 இலட்சம் மலையகத் தமிழர்களுக்கு துரோகம் செய்தவர். அவர்களது வாக்குரிமை, குடியுரிமை இரண்டையும் பறித்த சட்டங்களுக்கு வாக்களித்தவர். குமார் பொன்னம்பலம் வி.புலிகளுக்கு எதிராக தீவிர பரப்புரை செய்தவர். சந்திரிகா குமாரதுங்கா அவரை "எனது கருப்பு மகன்" என்று மேடையில் வைத்துப் பாராட்டியவர்.
கஜேந்திரகுமார் ததேகூ முன்னாள் நா.உ சுமந்திரனை முட்டாள் என்று வர்ணித்தது அவரது தலைக் கனத்தை காட்டுகிறது. அவரது அழுகிய மனத்தைக் காட்டுகிறது. அவரது அநாகரிகத்தைக் காட்டுகிறது.
நீதிமன்ற படிக்கட்டுகளை மிதிக்காத கஜேந்திரகுமார் இன்று இலங்கையின் தலைசிறந்த மனிதவுரிமை, அரசியல் யாப்பு சட்டத்தரணி ஆக விளங்கும் சுமந்திரனைப் பார்த்து முட்டாள் என்பது மிகவும் கண்டிக்கத் தக்கது.
சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போன்றது. குயிலைப் பார்த்து கோட்டான் உனக்குப் பாடத் தெரியாது என்பது போன்றது.
அமெரிக்க இராஜதந்திரிகள் இலங்கை வரும்போது முதல் சந்திக்கும் அரசியல்வாதியாக சுமந்திரன் விளங்குகிறார்.
கஜேந்திரகுமார் கொள்கை, கோட்பாடு தொடர்பாக ததேகூ டன் முரண்பட்டுக் கொண்டு வெளியேறவில்லை. அப்படி வெளியேறி இருந்தால் "சம்பந்தன் அவர்களும் சுமந்திரனும்" இல்லாத ததேகூ இல் சேரத்தயார் என்று சொல்லமாட்டார். எது எப்படியிருப்பினும் கஜேந்திரகுமாருக்கு நாவடக்கம் தேவை. இவர் வி.புலிகளின் தயவால் நா.உ. ஆனவர். இவர் நாடாளுமன்றத்தில் இருந்து எதைக் கிழித்தார் என்று சொல்ல முடியுமா? - நக்கீரன்